தமிழகத்தில் பிளாஸ்டிக் ஆலைகள் ஏதும் இயங்கவில்லை: அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்..

 

தமிழகத்தில் பிளாஸ்டிக் ஆலைகள் ஏதும் இயங்கவில்லை: அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்..

கடந்த ஜனவரி மாதம் முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களைத் தமிழக அரசு தடை செய்தது. அதன் பின், தடை செய்யப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டு விட்டன.

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி நேற்று நாடு முழுவதையும் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சொந்தம் பாளையத்தில் மகாத்மா காந்தியின் கோவில் நிறுவப்பட்டுள்ளது. அதில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டார். 

கே.சி. கருப்பணன்

பூஜை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், கடந்த ஜனவரி மாதம் முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களைத் தமிழக அரசு தடை செய்தது. அதன் பின், தடை செய்யப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டு விட்டன. ஆனாலும்,பிளாஸ்டிக் தமிழகத்தில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாகிறது என்று புகார் எழுந்துள்ளது. 9 மாதங்களுக்கு மேலாகியும் பிளாஸ்ட்டிக் ஆலைகள் ஏதும் இன்னும் இயங்கவில்லை. அதனால், இங்கு விற்பனையாகும் பிளாஸ்டிக் பொருட்கள் வட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படலாம் என்றும் இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். 

கே.சி. கருப்பணன்

மேலும், தேசிய மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவர் ஸ்டாலினும் வலியுறுத்துவதை, முன்னரே முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.