தமிழகத்தில் பன்றிக்காய்சலுக்கு பயமில்லை: அதிமுகவை கிண்டல் செய்த துரைமுருகன்!

 

தமிழகத்தில் பன்றிக்காய்சலுக்கு பயமில்லை: அதிமுகவை கிண்டல் செய்த துரைமுருகன்!

ஆளும் கட்சியினருக்கு  சிபிஐ காய்ச்சல் இருப்பதால் தமிழகத்தில்  பன்றிக்காய்ச்சலை பற்றி அதிகம் பயப்பட தேவையில்லை  திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார்.

வேலூர்: ஆளும் கட்சியினருக்கு  சிபிஐ காய்ச்சல் இருப்பதால் தமிழகத்தில்  பன்றிக்காய்ச்சலை பற்றி அதிகம் பயப்பட தேவையில்லை  திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார்.

வேலூரின் அணைக்கட்டு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கலைஞர் நினைவு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன், ‘சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் நியாயமாகத்தான் தீர்ப்புக் கூறியிருக்கிறது. ஆனால் வைதீகர்கள் எதிர்க்கிறார்கள். புதுமை விரும்பிகள் உள்ளே போக விரும்புகிறார்கள். கேரள அரசுக்கும் பெரிய தலைவலி. தேவசம்போர்டுக்கும் பிரச்சினை. கேரள முதல்வர் முற்போக்கு சிந்தனை உடையவர். ஆனால் சட்டம் ஒழுங்கு கட்டுக்கடங்காமல் போகிற போது தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் கோவில் விவகாரத்தில் தேவசம்போர்டு தான் முடிவெடுக்க வேண்டும் என ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் எடுக்கிற முடிவைத் தான் இனி பின்பற்றுவார்கள் எனக் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி கேள்விகேட்கப்பட்ட போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அன்றாடம் சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் ஆளும் கட்சியினருக்கு வழக்கு காய்ச்சல், சிபிஐ காய்ச்சல் இருப்பதால் தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை பற்றி அதிகம் பயப்பட தேவையில்லை’ என்று  குறிப்பிட்டுள்ளார்.