தமிழகத்தில்  துவங்குகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை! | ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகுமா?

தமிழகத்தில்  துவங்குகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை! | ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகுமா?

தமிழகத்தின் திரையரங்குகளில் ‘நீங்க நல்லா இருக்கணும்’ விளம்பரத்திற்கு பிறகு, திரும்புகிற இடங்களில் எல்லாம் முதல்வர் எடப்பாடியின் கோட் சூட் விவகாரம் தான் அதிகளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.. சிரிக்காதீங்க ப்ளீஸ்…! விஷயம் சிரிக்கிற ரகம் கிடையாது. நீங்க எல்லோரும் எடப்பாடியின் கோட், சூட் போட்டோக்களைப் பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் லண்டன் பயணத்தின் பலனாக, தமிழகத்தில் தனது மருத்துவமனையின் கிளையை நிறுவ சம்மதித்திருக்கிறது லண்டன் கிங்ஸ் மருத்துமனை.

edappadi

பல்நோக்கு மருத்துவமனைகளின் பட்டியலில் உலகத்தரம் வாய்ந்ததும், நூற்றாண்டுகள் கடந்த வரலாறு கொண்டதுமான லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் நிறுவப்பட உள்ளது. 1828ம் ஆண்டு துவக்கப்பட்ட கிங்ஸ் மருத்துவமனை 1829 ம் ஆண்டு நான்காம் ஜார்ஜ் மன்னர் காலத்தில், அரசு அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து, 1836ம் ஆண்டு மருத்துவப் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடைந்தது. அன்று முதல் இன்று வரை சுமார் 191ஆண்டுகாலமாக, மருத்துவ உலகில் சேவையாற்றி வருகிறது கிங்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி. நூற்றாண்டுகால அனுபவமும், உலகெமெங்கும் 300க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டுள்ள கிங்ஸ் மருத்துவமனை , அந்தந்தப் பகுதியிலுள்ள நோய்களையும், அதன் பரவலையும் கவனம் செலுத்தி தீர்த்து வைப்பதில் சிறந்து விளங்கும் மருத்துவ நிறுவனமாகும்.

kings hospital

மேலும் நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்குவதிலும், உடலின் அடிப்படை கூறான ஒவ்வொரு செல் மருத்துவத்திலும் கவனம் செலுத்தி நோய்களை பூரணமாக குணமடையச்செய்வதில் கிங்ஸ் மருத்துவமனை கல்லூரி சிறந்து விளங்குகிறது. நிலையான மருத்துவ வளர்ச்சியையும், தரமான மருத்துவத்தையும், போதுமான மருந்து இருப்பு உறுதியையும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, தமிழகத்தில் இந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது. 
இந்த மகிழ்ச்சியான விஷயம் ஒரு பக்கம் இருந்தாலும், முன்னாள் முதல்வர் அனுமதிக்கப்பட்டு இறந்து போன பிரபல தனியார் மருத்துவமனைக்கு பொதுமக்களிடையெ இதுநாள் வரையில் இருந்து வந்த செல்வாக்கு, கிங்ஸ் மருத்துவமனை தன் கிளையை இங்கே துவங்குவதால் இனி சரிய வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறார்கள். இந்த கிங்ஸ் மருத்துவமனையிலிருந்து தான் பிரபல மருத்துவர்கள் சென்னைக்கு வந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் பார்த்தார்கள். இவர்களது குடுமிபிடி சண்டையிலாவது ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் விலகுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்!