தமிழகத்தில் திமுக கூட்டணி ஆபார வெற்றி; டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு!

 

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆபார வெற்றி; டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு!

அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெரும் என டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இதனுடன் நடைபெறவுள்ளது.

election commission

இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியும் என்பதால், பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

aiadmk alliance

அந்த வகையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் இனைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 149 இடங்களையும், இதர கட்சிகள் 115 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 33 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 53.12 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணி 39.61 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் தேசிய ஜனநாயக கூட்டணி – 1, ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 17, இடதுசாரி முன்னணி – 2 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது, கர்நாடகாவில் தேசிய ஜனநாயக கூட்டணி – 16, ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 12 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது, ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் – 20, தெலுங்கு தேசம் – 5, காங்கிரஸ் – 0, பாஜக – 0, மற்றவை – 0 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது, தெலங்கானாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 2, தேசிய ஜனநாயகக் கூட்டணி – 0, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி – 14, மற்றவை – 1 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

அனில் அம்பானி குறித்து உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தவறான பதிவு; இருவர் கைது!