தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; அதிகபட்சமாக சென்னையில் 934 பேர் என தகவல்!

 

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; அதிகபட்சமாக சென்னையில் 934 பேர் என தகவல்!

ஒருவருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாதிரியின் முடிவு மட்டும் வரவில்லை என்று  சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்று காரணமாக தமிழகத்தில் 2635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் இதுவரை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 861 பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.  2635 பேர் வீடுகளில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 24 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், அதிகபட்சமாக சென்னையில் 934 பேரும், குறைந்தபட்சமாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா 4 பேரும் உள்ளனர்.  கொரோனா பாதிப்புகள் குறித்து இதுவரை 140 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  இதில், 139 மாதிரிகளின் முடிவுகள் வந்ததையடுத்து  138 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு மாதிரியின் முடிவு மட்டும் வரவில்லை என்று  சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

ttn

மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமாகியுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.