தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையிலும் மழை!

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையிலும் மழை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்திலும் புதுவையிலும் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்த நிலையில், மீண்டும் தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தஞ்சை, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று தொடங்கி 21ம் தேதி வரையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், சென்னையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இன்று  லேசான மழை பரவலாக பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.