தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை! வங்க கடலில் உருவான ‘புல் புல்’ புயல்! 

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை! வங்க கடலில் உருவான ‘புல் புல்’ புயல்! 

வங்க கடலில், அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. வங்க கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புதிய புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த புதிய புயலுக்கு புல் புல் என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புதிய புல் புல் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

cyclone

புதியதாக உருவெடுத்திருக்கும் புல்புல் புயல், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து, 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவிலிருந்து 830 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. மேலும் இந்தப் புயல், வடக்கு, வடமேற்கு திசையில் நகரந்து மேற்கு வங்காளம், பங்களாதேஷ் நோக்கி செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

புல் புல் புயல் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது.