தமிழகத்தில் அதிசயம் நடப்பதற்கு முன்பே மகாராஷ்டிராவில் நடந்ததுவிட்டது- ஹெச். ராஜா 

 

தமிழகத்தில் அதிசயம் நடப்பதற்கு முன்பே மகாராஷ்டிராவில் நடந்ததுவிட்டது- ஹெச். ராஜா 

தமிழகத்தில் அதிசயம் நடப்பதற்கு முன்பே மகாராஷ்டிராவில் நடந்ததுவிட்டது என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிசயம் நடப்பதற்கு முன்பே மகாராஷ்டிராவில் நடந்ததுவிட்டது என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கூட்டணி முடிவாகிவிட்டதாகவும் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார் என்றும் பேசப்பட்டுவந்தது. ஆனால் ஒரே இரவில் அனைத்தும் மாற்றமடைந்துமகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்திற்குள் பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். 

H Raja
 
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா “நிலையான ஆட்சியை தர வேண்டும், மறு தேர்தலை தவிர்க்க வேண்டும் என்று காரணத்தால் பாஜக தலைமையில் தற்போது ஆட்சி அமைந்திருக்கிறது. மீண்டும் முதல்வராக வந்துள்ள பட்னாவிஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். மகாராஷ்டிராவில் நல்ல ஒரு ஆட்சி அமைந்து உள்ளது என்கிற சந்தோஷமான செய்தி நிம்மதி அளிக்கிறது. மகாராஷ்டிராவில் முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. நீண்ட நாட்களாக குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது நிலையான ஆட்சி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளித்திருக்கிறது” எனக் கூறினார்.