தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட்களை அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டது !.. தலைமைச் செயலர் சண்முகம்

 

தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட்களை அமெரிக்காவுக்கு  திருப்பிவிடப்பட்டது !.. தலைமைச் செயலர் சண்முகம்

கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதை அரை மணி நேரத்தில் கண்டுபிடிப்பதற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா சோதனைகளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க தமிழகம் முடிவு செய்து இருந்தது. இதன் மூலம் துரிதமாக கொரோனா சோதனைகளை செய்ய முடியும். 4 லட்சம் கிட் ஆர்டர் செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் கிட் கடந்த 9 ஆம் தேதி தமிழகத்திற்குவரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால் 11 தேதியாகவும் இன்னும் வரவில்லை. சீனாவிலிருந்து கப்பலில் கிளம்பிய ரேபிட் கிட்டை அமெரிக்கா பாதி வழியிலேயே மூன்று மடங்கு தொகைக்கு விற்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் சீனாவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லவிருந்த மருத்துவ உபகரணங்களையும், பிரான்ஸிருக்கு செல்ல வேண்டிய மருத்துகளையும் அமெரிக்கா அபகரித்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

coronavirus

இந்நிலையில் தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த கருவிகள் வர தாமதமானதால் கொரோனா ரேபிட் சோதனை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.