தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்; மீட்பு பணிக்கு தயார்: தேசிய பேரிடர் மீட்பு படை அறிவிப்பு

 

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்; மீட்பு பணிக்கு தயார்: தேசிய பேரிடர் மீட்பு படை அறிவிப்பு

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணிக்கு வீரர்கள் தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.

டெல்லி: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணிக்கு வீரர்கள் தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி 25 செ.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்படுவர் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய பேரிட மீட்பு படை தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 7-ம் தேதி மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் கொடுத்துள்ள சூழலில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்கின்றனர். தேவைப்பட்டால் அதிகளவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வீரர்களை அனுப்ப தயாராக இருக்கிறோம். எவ்வளவு குழுக்களை வேண்டுமானாலும் அனுப்ப தயார். பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது