தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வெப்பச்சலனம் காரணமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, ராயப்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, வானகரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் நேற்று மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையைத் தவிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்க அங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி, தஞ்சை, கன்னியாகுமரி, விருதுநகர், கோவை, தேனி, , ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.