தமிழகத்தின் ஸ்டிக்கர் மோகம் கேரளாவிலும் பரவியது! – சானிடைசரில் சென்னிதாலா படம்

தமிழகத்தின் ஸ்டிக்கர் மோகம் கேரளாவிலும் பரவியது! – சானிடைசரில் சென்னிதாலா படம்

தமிழகத்தில் வெள்ள நிவாரண நேரத்தில் பொது மக்கள் வழங்கிய உதவிப் பொருட்கள் மீது எல்லாம் ஜெயலலிதா படம் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்பட்டது போல் கேரளாவில் தற்போது ஹேண்ட் சானிடைசர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கப்பட்டு வருகிறது.

admk stickers

2015ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது மக்களுக்கு நாடு முழுவதும் இருந்து உதவிகள் குவிந்தன. அரிசி, பெட்ஷீட் என்று வந்த பொருட்கள் மீது எல்லாம் அ.தி.மு.க-வினர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி விநியோகம் செய்தனர். இது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பிறகும் அவ்வப்போது ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரம் தலைதூக்கும்… ஆனால் பெருவெள்ள கால அளவுக்கு இல்லை என்பதால் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை.

chennithala  sticker

இந்த நிலையில் ஸ்டிக்கர் கலாச்சாரம் கேரளாவில் பரவியுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலா ஸ்டிக்கர் ஒட்டி மக்களுக்கு கைகளை சுத்தம் செய்யும் ஹேண்ட் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் வழங்கி வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்திலும் அரசியல் பிரசாரம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.