தமிழகத்தின் பிச்சை பாத்திரம்  ‘கருணாநிதி ’… அட்சய பாத்திரம்‘ஜெயலலிதா ’!

 

தமிழகத்தின் பிச்சை பாத்திரம்  ‘கருணாநிதி ’… அட்சய பாத்திரம்‘ஜெயலலிதா ’!

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அதில் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முற்பட்டது.  அதற்கு எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதால், உணர்வுகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி திமுக உறுப்பினர்களும், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதைதொடர்ந்து தமிழகத்தின் பிச்சை பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி. அட்சய பாத்திரமாக மாற்றியவர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் சட்டப்பேரவையில் பெருமை பீத்தினார். 

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், திமுகவிடம் பாத பூஜை செய்து பதவி பெற்றுள்ள செந்தில் பாலாகி உதிர்ந்த வார்த்தைகள்தான் இவை என நக்கல் அடித்தார். 

இதனைக் கேட்ட திமுக கொறடா சக்கரபாணி, மறைந்த தலைவர்களை இது போன்று மரியாதை இல்லாமல் பேசுவது தவறு அப்படி செய்யக்கூடாது என அறிவுரை கூறினார்.