தப்பு…தப்பு…அவரெல்லாம் கருத்து சொல்ல கூடாது… ராணுவ தளபதிக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

 

தப்பு…தப்பு…அவரெல்லாம் கருத்து சொல்ல கூடாது… ராணுவ தளபதிக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

நம் நாட்டு ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை நிகழ்வது தொடர்பாக கருத்து தெரிவித்தார். தலைவர்கள்தான் மக்களை சரியான திசையில் கொண்டு செல்வார்கள் தலைவர்கள் மக்களை தவறான பாதையில் வழி நடத்தமாட்டார்கள். நகரங்களில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களை நிகழ்த்த அவர்களை வழிநடத்துவது நல்ல தலைமை அல்ல என அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

பிபின் ராவத்

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரிஜெஷ் கலாப்பா இது குறித்து டிவிட்டரில், ராணுவ தளபதி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து பேசியிருப்பது அரசியலமைப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. இன்று அரசியல் விவகாரங்களை ராணுவ தளபதியை பேச அனுமதித்தால் நாளை ஆட்சியை கைப்பற்ற  ராணுவத்துக்கு அனுமதி அளிப்பது போன்றது என பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ்

சி.பி.ஐ.(எம்) விடுத்துள்ள அறிக்கையில், ராணுவ தளபதியின் கண்மூடித்தனமாக கருத்துகள் நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாட்டுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர் தனது கருத்துக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது தவிர பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தள கட்சியும் ராணுவ தளபதியின் அரசியல் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.