தபால் வாக்குகளில் இவ்வளவு செல்லாத வாக்குகளா…!

 

தபால் வாக்குகளில் இவ்வளவு செல்லாத வாக்குகளா…!

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 4 வகையான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தபால் மூலமாக மக்கள் செலுத்திய ஓட்டுகளில் பல செல்லாத ஓட்டுகள் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது. 

ttn

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் முதல் கட்டமாக 60 தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதில், உரிய ஆவணங்களை வைக்காததால் 58 ஓட்டுகள் செல்லாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சியில் பதிவான 118 தபால் வாக்குகளில் மொத்தம் 96 வாக்குகள் செல்லாது என்றும் 22 வாக்குகள் மட்டுமே செல்லும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் இதே போன்று தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.