தபால் தேர்வு ரத்து செய்ததின் நிர்வாக காரணம் என்ன? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

 

தபால் தேர்வு ரத்து செய்ததின் நிர்வாக காரணம் என்ன? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன.இ

சென்னை: தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணம் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கு திமுக, அதிமுக  உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து  மாநிலங்களவையில் கடந்த 16 ஆம் தேதி  அதிமுக எம்.பிக்கள்  தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.மேலும் தமிழக எம்பிக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கடந்த ஜூலை 14 தேதி நடைபெற்ற தேர்வை ரத்துசெய்தும் உத்தரவிட்டார். 

postal

இதனிடையே  தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை  திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அதற்கு  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் இருவரும் வருங்காலங்களில் தபால் துறை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

hc

இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள் இதில் பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே தவிர பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடவில்லை என்று கூறினர். அப்போது ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் மீண்டும் பதில் மனுத் தாக்கல் செய்வதாகவும் உறுதி அளித்தார். 

postal

இந்நிலையில் தபால் துறை தேர்வை ரத்து செய்ததன் நிர்வாக காரணம் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக ஆகஸ்ட் 5 ஆம் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.