தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ் அறிவிப்பு

தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ் அறிவிப்பு

‘மீ டூ’ இயக்கம் துவங்கியதில் இருந்தே இந்தியா முழுவதும் பல்வேறு பெரிய தலைகள் மீதான விமர்சனங்கள் எழுந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா துறை, இசைத் துறை, விளையாட்டு, மாடலிங் உலகம் என்று நாடு முழுவதுமே மீ டூ  புகார்கள் வந்தவண்ணமாக இருக்கிறது. நிஜமான அத்துமீறல்களும், சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் உள்ளவர் மீது சுயநலத்தோடு சுமத்தப்படும் பொய் குற்றச்சாட்டாகவும், ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

tanusri

‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறியிருந்தார். தொடர்ந்து, ‘நடந்த சம்பவம் பற்றி நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆட்கள் மிரட்டினார்கள். காரில் குடும்பத்தினரோடு சென்றபோது தாக்கப்பட்டேன்’ என்றும் கூறியிருந்தார். அந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும் தமிழில் ஜீவாவுடன் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சார்யா எனக்கு நேர்ந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.

tanusri

தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டு நானா படேகருடன் நிற்காமல், இன்னொரு இயக்குநர் மீதும் பாய்ந்தது. இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படப்பிடிப்பில் என்னை, உடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்கும்படி கூறினார் என்றும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் தனுஸ்ரீதத்தா. இந்தி நடிகைகள் சிலரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.  இந்நிலையில் தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா காவல் நிலையத்தில் நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.

tanusri

நானா படேகருக்கு எதிரான வழக்கில், இன்று முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்த போலீசார், மும்பை கோர்ட்டில் ‘நானா படேகருக்கு எதிராக  தேவையான சாட்சியங்கள் இல்லை. அதனால் இந்த வழக்கு விசாரணையை தொடரமுடியவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.
தனுஸ்ரீ தத்தாவின் மீ டூ புகார் தான், இந்தியாவில் பரவலாக மீ டூ இயக்கத்தைக் கொண்டு சேர்த்ததையும், பல்வேறு துறைகளில் இருந்தும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
இது குறித்து தனுஸ்ரீ தத்தா, ‘போலீஸாரின் இந்த பதிலைக் கேட்டு நான் அதிர்ச்சியடையவுமில்லை. ஆச்சர்யப்படவுமில்லை. இந்தியாவில் பெண்ணாகப் பிறந்தால், சில விஷயங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும் போல’ என்று தெரிவித்திருக்கிறார்.