தனுஷ் ரசிகர்களைத் தாக்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா! சீறுமா…சிக்குமா!?

 

தனுஷ் ரசிகர்களைத் தாக்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா! சீறுமா…சிக்குமா!?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’  படம் வருமா…வராதா என்று குழப்பித்திலிருக்கும் தனுஷ் ரசிகர்களை,படத்தின் பாடல்கள் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’  படம் வருமா… வராதா என்று குழப்பித்திலிருக்கும் தனுஷ் ரசிகர்களை,படத்தின் பாடல்கள் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளி விட்டு ஒருவழியாக கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

enpt

படத்தின் பாடல்களை தனது ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முலமாக ரைட்ஸ் வாங்கிய இயக்குனர் கவுதம் மேனன், அதில் இரண்டு பாடல்களை தனக்கு சொந்தமான யூ ட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்தார். ஆடியோவுக்கு அவர் கொடுத்த பணத்தைவிட அதிகளவில் யூ ட்யூப் மூலமாகவே வருமானம் வந்திருக்கும்.படம் ரிலீசானால் இந்த வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காகவே படத்தின் ரிலீஸ் தேதியை வேண்டும் என்றே இழுத்தடிக்கிறார் என்றுகூட கவுதம் மேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது!

என்னை நோக்கி பாயும் தோட்டா

இந்த நிலையில்,திடீரென எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்  யூடியூபிலிருந்து நீக்கப்பட்டதால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனால்,இப்படம் கைவிடப்பட்டதாக சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சாக இருந்தது!

enpt

 யாரோ தப்பான வதந்தியைக் கிளப்பியிருக்கிறார்கள். கவுதம் மேனனிடம் இருந்த ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.உரிமம் கைமாற்றும் சூழல் இருப்பதால் தற்காலிகமாக பாடல்களை நிறுத்தி வைத்திருக்கிறோம்.விரைவில் சோனி தளத்தில் இதே பார்வையாளர்களின் எண்ணிக்கையோடு ரசிகர்கள் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள் தயாரிப்பு தரப்பு ஆட்கள்.

 

enpt

ஸோ ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ சகல பிரச்சினைகளையும் சமாளித்து மே மாதம் திரைக்கு வந்துவிடும் என்று தனுஷ் ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்! உண்மையாவா? வேற வழி…நம்பித்தானே ஆகவேண்டும்!

இதையும் படிங்க: ரசிகர்களுடன் உரையாட நடிகர் அருண் விஜய் செய்த காரியத்தை பார்த்திங்களா?