தனுஷ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர் இவர்தான்.

தனுஷ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர் இவர்தான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோஸ் நடிக்கிறார். ஸ்காட்லாந்துக்காரரான காஸ்மோஸ் பிரமாண்ட உருவத்துடன் தாடியும் மீசையுமாக கையில் வாளுடன் தோன்றி மிரட்டிய படங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. 

dhanush-new-film

1995-ல் வெளிவந்த மெல்கிப்ஸனின் பிரேவ் ஹார்ட்டில் கேம்பெல் என்கிற கதாபாத்திரத்தில் தோன்றியவர். இன்னும் இவான்ஹோ-1997,கிளியோபாட்ரா 1999,ஏன் 2004-ல் வந்த ட்ராய் படத்தில் பிராட் பிட்டின் அரசன் க்ளாக்கஸாக வந்து அசரடித்ததும் இவர்தான்.

சினிமாவில் மட்டுமல்ல தொலைக்காட்சித் தொடர்களிலும் காஸ்மோஸ் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.உதாரணத்திற்கு நார்னியா தொடரில் வரும் ஃபாதர் கிறிஸ்துமஸ் கதாபாத்திரத்தை சொல்லலாம்.
தொலைக்காட்சி தொடர்களுக்கு பிறகு இப்போது புதிதாகத் துவங்கி இருக்கும் வெப் சீரீசிலும் காஸ்மோஸ் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து இருக்கிறார். 

Jemes-cosmos-in-GOT

கடந்த பத்தாண்டுகளில் வந்த வெப் சீரீஸ்களில் பெரிய வெற்றி பெற்றது கேம் ஆஃப் துரோன் தொடர்தான்.அதில்,லார்ட் கமாண்டர் ஜியோர் மொர்மாண்ட் கதாபாத்திரத்தை அவளவு எளிதில் மறந்து போக முடியுமா?இப்படி ,முதன் முறையாக ஒரு உண்மையான ஹாலிவுட் நடிகரை தமிழுக்கு கொண்டுவரும் கார்த்திக் சுப்புராஜ்- தனுஷ் கூட்டணி பாராட்டத்தக்கது.