தனுஷின் அடுத்த 2 படங்களை தயாரிக்கும் அஜித் பட தயாரிப்பாளர்!

 

தனுஷின் அடுத்த 2 படங்களை தயாரிக்கும் அஜித் பட தயாரிப்பாளர்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கவுள்ளார்.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கவுள்ளார்.

‘வடசென்னை’, ‘மாரி 2’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சரித்திர கால வரலாற்று படத்தை தனுஷ் இயக்கி வருகிறார்.

asuran

இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதில் ஒரு படத்தை ‘கொடி’ பட இயக்குநர் துரை செந்தில்குமாரும், மற்றொரு படத்தை ‘முண்டாசுப்பட்டி, ராட்சசன்’ புகழ் ராம் குமாரும் இயக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் துரை செந்திகுமார் இயக்கும் திரைப்படத்திற்கு விவேக்-மெர்வின் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

மேலும், இப்படங்களின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது