தனியார் வங்கி தனியார் வங்கிதான்….. ரூ.7,280 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி….

 

தனியார் வங்கி தனியார் வங்கிதான்….. ரூ.7,280 கோடி லாபம் பார்த்த எச்.டி.எப்.சி. வங்கி….

எச்.டி.எப்.சி. வங்கி கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.7,280 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.4 சதவீதம் அதிகமாகும்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று எச்.டி.எப்.சி. வங்கி. இந்த வங்கி நேற்று தனது 2019-20ம் நிதியாண்டின் 4வது காலாண்டு (2020 ஜனவரி-மார்ச்) நிதிநிலை முடிவை வெளியிட்டது. கடந்த மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7,280.22 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கி ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.6,300.81 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

எச்.டி.எப்.சி. வங்கி

கடந்த மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி.வங்கியின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.38,287.17 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் மொத்த வருவாய் ரூ.33,260.48 கோடியாக இருந்தது. ரிசர்வ் வங்கியன் உத்தரவுகளின்படி, 2018-19ம் நிதியாண்டின் லாபத்திலிருந்து டிவிடெண்ட் வழங்க மாட்டோம் என எச்.டி.எப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழ்நிலையால் மூலதனத்தை பாதுகாக்க, வங்கிகள் டிவிடெண்ட் வழங்க மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்த உத்தரவால்தான் எச்.டி.எப்.சி. பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.