தனியாருக்கு தாரைவார்க்க துணிந்த மத்திய அரசு; போராட்டத்தில் குதித்த எல்.ஐ.சி ஊழியர்கள்

தனியாருக்கு தாரைவார்க்க துணிந்த மத்திய அரசு; போராட்டத்தில் குதித்த எல்.ஐ.சி ஊழியர்கள்

கடந்த சனிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். எதிர்பார்த்தது போன்றே பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. வருமான வரி மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிபந்தனைக்கு உட்பட்டது என்று புதிய வருமான வரி திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதைக் கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். எதிர்பார்த்தது போன்றே பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. வருமான வரி மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிபந்தனைக்கு உட்பட்டது என்று புதிய வருமான வரி திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

lic-staff-strike

பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என எல்லா எல்.ஐ.சி அலுவலகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், மத்திய அரசு எல்.ஐ.சி-யை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.