தனியாக வசிக்கும் முதியவருக்கு போலீசார் கொடுத்த திடீர் சர்பிரைஸ்.. நெகிழ்ச்சியில் கண்கலங்கிய முதியவர்!

 

தனியாக வசிக்கும் முதியவருக்கு போலீசார் கொடுத்த திடீர் சர்பிரைஸ்.. நெகிழ்ச்சியில் கண்கலங்கிய முதியவர்!

ஹரியானா போலீசார் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல், வீட்டிலேயே தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றனர். ஆனால் தனியாக வசித்து வரும் நபர்களோ மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருவது போல உணருகின்றனர். இந்நிலையில் ஹரியானா போலீசார் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

ttn

பஞ்ச்குலா போலீசார் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் நின்று கொண்டு, முதியவர் ஒருவரை வெளியே வரும் படி கூறியுள்ளனர். அப்போது வெளியே வந்த அந்த முதியவரிடம் போலீசார் பெயர் கேட்டதின் படி, தன் பெயர் கரண் புரி என்றும் தான் இங்கு தனியாக வசித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று ஹேப்பி பர்த்டே எனக் கூறிக் கொண்டே போலீசார் கையில் வைத்திருந்த கேக்கை வெளியே எடுத்து வெட்ட சொல்லுகின்றனர். இதனை சற்றும் எதிர்பாராத அந்த முதியவர், நெகிழ்ச்சியில் கண்கலங்கி போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறார். 

ttn

இது குறித்து பேசிய போலீசார், அந்த முதியவருக்கு இது 71 ஆவது பிறந்தநாள். அவரின் மகன்கள் எல்லாரும் வெளிநாட்டில் வசித்து வருவதால் அவர் இங்கு தனியாக இருக்கிறார். அதனால் அவரின் பிறந்தநாளை கொண்டாடும் படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த சர்பிரைஸை செய்தோம் என்று கூறியுள்ளனர்.