தனிமைப்படுத்தப் பட்டோருக்கான வார்டு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

 

தனிமைப்படுத்தப் பட்டோருக்கான வார்டு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

பாதிப்பு அதிகமானால் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கேயே தங்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சில பகுதிகளில் அவரவர் வீடுகளிலும், சில பகுதிகளில் சிறப்பு வார்டுகளிலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் காலி இடங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாதிப்பு அதிகமானால் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கேயே தங்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  

ttn

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.அதன் படி, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியிலும் புதிதாக 10 கட்டிடமும், எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிதாக ஆயிரக் கணக்கான வீடுகளும் எர்ணாவூர் நேதாஜி நகரில் ஒரு குடியிருப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்கள் இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.

தேர்வு செய்யப்பட்ட அந்த இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வார்டுகள் அமைக்கப்பட உள்ள நிலையில், இதனை பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்டோர் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.