தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு மத்திய அரசு பாராட்டு!

 

தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு மத்திய அரசு பாராட்டு!

அம்மா உணவகங்கள் தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்களுக்கு பசியாற்றி வருகிறது.

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மக்களுக்கு உதவும் பொருட்டு, சில அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அம்மா உணவகங்கள் தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்களுக்கு பசியாற்றி வருகிறது. அம்மா உணவகங்களுக்கு அரசியல் கட்சியினர் நிதியுதவி செய்து வருகின்றனர். அதே போல தன்னார்வலர்களும் நிதியுதவி அளித்து வருவதாக கூறப்படுகிறது. 

ttn

இந்நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு  பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. தினக்கூலி, லாரி ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என தினமும் 85 லட்சம் மக்களுக்கு சிறப்பாக உணவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கில் மொத்தமாக 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.