தனது கிராம மக்களுக்கு 2000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறிகள் வழங்கிய காவலர்.. குவியும் பாராட்டுக்கள்!

 

தனது கிராம மக்களுக்கு 2000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறிகள் வழங்கிய காவலர்.. குவியும் பாராட்டுக்கள்!

காவல்துறை அதிகாரி இசக்கி ராஜா அவரது பிறந்த நாளுக்கு நிவாரண உதவி செய்தது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1900ஐ கடந்துள்ளது. அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாதது அச்சத்தை அதிகரிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் என பலரும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர். அதே போல, அரசும் உணவுக் கூடங்கள் அமைத்து சாலைகளில் வசிப்போருக்கு உணவு வழங்கி வருகிறது. 

ttn

இந்நிலையில் காவல்துறை அதிகாரி இசக்கி ராஜா அவரது பிறந்த நாளுக்கு நிவாரண உதவி செய்தது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் வட்டத்தில் உள்ள பாறைக்குட்டம் என்னும் கிராமத்தில் பிறந்த இவர், தனது பிறந்தநாளன்று கிராம மக்களுக்கு நிவாரண உதவி வழங்க முடிவு செய்துள்ளார். அதன் படி, பாறைக்குட்டம் கிராம மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி 2000 கிலோ, காய்கறிகள் 500 கிலோ, மளிகை பொருட்கள், கபசுர குடிநீர், மற்றும் மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்துள்ளர். இவரின் செயலால் பாறைக்குட்டம் கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.