தனது அப்பாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…பழைய நினைவுகளை சொல்லும் புகைப்படம்!

 

தனது அப்பாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…பழைய நினைவுகளை சொல்லும் புகைப்படம்!

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர். அவரது தாயோ, கோவையை சேர்ந்தவர். ரஜினிக்கு சத்யநாராயணா என்ற அண்ணன்  உள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கர்நாடக மாநிலத்தில் ரானோஜிராவ் – ராமாபாய் இருவருக்கும்  1950 ஆம் ஆண்டு, டிசம்பர் 12 ஆம் தேதி  பிறந்தவர் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த். ரஜினியின் தந்தை  ரானோஜி ராவ் காவலராகப் பணிபுரிந்தவர். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர். அவரது தாயோ, கோவையை சேர்ந்தவர். ரஜினிக்கு சத்யநாராயணா என்ற அண்ணன்  உள்ளார்.

rajini

சாதாரண பஸ்  கண்டக்டராக வாழ்க்கை தொடங்கிய இவருக்கு கோடம்பாக்கம் வருகை பெரும் மாற்றத்தை அளித்தது. வில்லன், குணசித்திர வேடம், ஹீரோ என முன்னேறிய ரஜினிக்கு ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்தன. 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இன்னும்  தமிழ் சினிமாவின் மாபெரும் அத்தியாயமாகவே உள்ளார் ரஜினிகாந்த். 

rajini

ரஜினிகாந்த் குறித்த தகவல்கள்  அவரின் வாழ்க்கை  வரலாறு பலருக்கு தெரிந்திருந்தாலும் அவரின் தந்தையை பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.  

ttn

இந்நிலையில் ரஜினியின் தந்தை புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.