தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் எதிரொலி | வெறிச்சோடி கிடக்கும் சென்னை அடுக்குமாடி குடியிருப்புகள்!

 

தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் எதிரொலி | வெறிச்சோடி கிடக்கும் சென்னை அடுக்குமாடி குடியிருப்புகள்!

கோடைக்கு முன்பாகவே சென்னை நகர் முழுவதுமே தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் கோடையைக் கடந்தும் தண்ணீர் பற்றாக்குறையால், அவ்வப்போது வருகிற தூரல்களில் சமாளித்து வந்த தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியாய் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு இருந்தது. இவர்களிடன் போராட்ட அறிவிப்பினால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.  

தண்ணீர் லாரி ஸ்ட்ரைக் எதிரொலி | வெறிச்சோடி கிடக்கும் சென்னை அடுக்குமாடி குடியிருப்புகள்!

lorry strike

விண்ணை முட்டும் கட்டிடங்கள், ஒவ்வொரு குடியிருப்புக்கும் பத்து, பதினைந்து வீடுகளில் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் என்று சென்னை நகர் முழுவதுமே நிறைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதனால், தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகை விடுமுறைகள் வருவதாலும், வார இறுதியையொட்டி இப்போதே பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க சொந்த ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், லாரிகள் மூலமாகத் தான் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக தனியார் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்வதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தண்ணீர் எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வரை, தங்களது போராட்டத்தை கைவிட முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.