தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க ஐடி நிறுவங்கள் செய்த அதிரடி..! 

 

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க ஐடி நிறுவங்கள் செய்த அதிரடி..! 

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது… அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று தனியாரிடமிருந்து லாரிகளில் தண்ணீர் வாங்கி தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.ஒன்றிரண்டு வீடுகள் இருக்கும் கும்பங்களின் நிலைமை படு மோசம்

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது… அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று தனியாரிடமிருந்து லாரிகளில் தண்ணீர் வாங்கி தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.ஒன்றிரண்டு வீடுகள் இருக்கும் கும்பங்களின் நிலைமை படு மோசம்.

watertankers

இப்படியான நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஐடி நிறுவனங்கள் புது யுக்தியைக் கையாள ஆரம்பித்திருக்கிறார்கள்.குறிப்பாக omr பகுதியில் இருக்கும் பெரிய நிறுவனங்கள்.இந்த ஏரியாவில் மட்டும் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. அந்த நிறுவங்களுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு  3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 
 
பெரும்பாலும் தண்ணீர் வெளியிலிருந்துதான் கொண்டு வரப்படுகிறது. இவற்றில் 60 சதவிகித தண்ணீர் ஐடி நிறுவனங்களால் பயன்படுத்தி வருகின்றன.குறிப்பாக சிப்காட் ஐடி பகுதியில் 46 ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. 

sipcot

இதற்கு அங்குள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படும். ஆனால் தற்போது அங்கு ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினமும் தரப்பட்டு வருகிறது. 
 
இதானால், இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
 
உதராணமாக சோளிங்நல்லூரிலுள்ள ஃபோர்டு நிறுவனம்,அங்கு பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான குடிநீரை வீட்டிலிருந்தே  கொண்டு  வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.மேலும் பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளன. 

water

இன்னும் சில நிறுவனங்கள்,தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.சரி,அவளவு ஆட்களும் அவரவர் வீட்டுக்கு வந்தாலும் அங்கும் அவர்களின் பயன்பாட்டுக்கான தண்ணீர் தேவைப்பதுதானே..!?