தண்ணீர் பிரச்சனையால் ஷவரைத் தவிர்த்துவிட்டு பக்கெட்டில் குளிக்கிறேன் – கமல்ஹாசன்

தண்ணீர் பிரச்சனையால் ஷவரைத் தவிர்த்துவிட்டு பக்கெட்டில் குளிக்கிறேன் – கமல்ஹாசன்

தமிழகம் முழுக்கவே தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி கிட்டத்தட்ட தமிழகத்தின் முக்கால்வாசி மாவட்டங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் இரு வருடங்களில் தமிழகத்தின் பெரு நகரங்களில் நிலத்தடி நீர் சுத்தமாகவே இருக்காது என்று எச்சரித்திருக்கிறார்கள் சுற்றுசூழல் ஆய்வாளர்கள்.

waterscarcity

இந்நிலையில், இன்று தமிழகம் முழுக்க கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தண்ணீர் பிரச்சினைக் குறித்து கேள்வியெழுப்பி போது, ‘அந்த காலத்தில் இருந்த ஒழுக்கமின்மை தான் இன்னும் இருக்கிறது. மக்கள் தான் மாற வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் இந்த 3 நாட்கள் மழையிலேயே பல லட்சம் தண்ணீர் சேமித்து இருக்கிறார்கள். சரியான திட்டம் இருந்தால் 3 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்படாத அளவுக்கு மழை நீரை சேமிக்கும் திட்டங்கள் இருக்கின்றன. அதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

kamal

நமது தேடல் நமக்குள் முதலில் இருக்க வேண்டும். ஷவரில் குளித்து வந்த நான் இப்போது வாளியில் பிடித்து குளித்து வருகிறேன். இது போன்ற மாற்றங்கள் வர வேண்டும்’ என்றார்.