தண்ணீர் இல்லையென்றால் பள்ளியை மூடுங்கள் செங்கோட்டையரே… கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

 

தண்ணீர் இல்லையென்றால் பள்ளியை மூடுங்கள் செங்கோட்டையரே… கொந்தளிக்கும் பெற்றோர்கள்!

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிற நிலையில் குடியிருப்புகள் மட்டுமின்றி, ஐடி கம்பெனிகள், பள்ளிகளும் கூட தண்ணீர் பிரச்னையால் தவித்துக்கொண்டிருக்கின்றன.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிற நிலையில் குடியிருப்புகள் மட்டுமின்றி, ஐடி கம்பெனிகள், பள்ளிகளும் கூட தண்ணீர் பிரச்னையால் தவித்துக்கொண்டிருக்கின்றன. தண்ணீர் வசதி இல்லாததால் வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என அறிவுறுத்தும் ஐடி கம்பெனிகள், குடிப்பதற்கு எங்களிடம் தண்ணீர் கேட்காதீங்க… வீட்ல இருந்து வரும்போதே கொண்டுவந்துடுங்க என அறிவுறுத்தும்  பள்ளிகள் என அவலத்தின் கூக்குரல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. 

பள்ளிச்செல்லும் குழந்தைகள் குடிப்பதற்கு வேண்டுமானால் வீட்டிலிருந்து தண்ணீரை கொண்டு செல்லலாம், ஆனால் கழிவறைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குவந்தா மற்ற வேலைகளை பார்க்க முடியும் என குமுறுகின்றனர் பெற்றோர்கள்… இது அரசுப்பள்ளிக்கு மட்டுமல்ல பல கோடிகளை கொட்டி குழந்தைகளை படிக்க வைக்கும் தனியார் பள்ளிக்கும் பொருந்தும். பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என்கிற நிலை மாறி, தண்ணீர் வசதி இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்காக பல பள்ளிகளில் கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்துள்ளனர். இது மாணவர்களுக்கு மட்டுமில்லையாம் ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமாம். 

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் குழந்தைகள் மருத்துவர்கள், பாத்ரூம்களில் போதிய தண்ணீர் வசதி செய்து தரவில்லை என்றால், குழந்தைகளுக்கு கடுமையான தொற்று நோய் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், பாத்ரூம் வரும்போதே அடக்கிவைத்து கொள்ளாமல் உடனடியாக கழிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.