தஞ்சை பெரிய கோவிலில் களைக்கட்டும் மக்கள் கூட்டம் !

 

தஞ்சை பெரிய கோவிலில் களைக்கட்டும் மக்கள் கூட்டம் !

23 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. குடமுழுக்கைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், அன்று காலை சுமார் 9:21 மணிக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் காவிரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 

ttn

தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் குடமுழுக்கின் போது மந்திரங்கள் எந்த மொழியில் ஓதப்படும் என்று குழப்பம் நிலவி வந்தது. ஆனால், குடமுழுக்கின் போது கோபுரத்தில் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க, விண்ணை முட்டும் அளவிற்கு ஓம் நமச்சிவாய நாமத்துடன் குடமுழுக்கு நடந்தது. இது தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

பொதுவாக ஒரு கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றால், அங்கு ஒரு மண்டலத்திற்குள் சென்று வர வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம். அதாவது கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 48 நாட்களுக்குள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று 6 நாட்களே ஆகும் நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். இதன் காரணமாகக் கோவிலில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு  மக்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.