தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் ரத்து !

 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் ரத்து !

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பணி நியமன ஆணையை வழங்கினார்.

ttn

பணி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகள் வரை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆளுநர்  எப்போதுமே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே துணை வேந்தராக நியமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

ttn

அதுமட்டுமில்லாமல், தஞ்சை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ரவீந்திரன் என்பவர், பாலசுப்பிரமணியனுக்கு உரியக் கல்வித் தகுதி இல்லை என்றும் விதிகளை மீறி அவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை விசாரித்து வந்தது. அதில், இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் பணிநியமனத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.