தங்க விலையில் குறைவு.. ரூ.29 ஆயிரத்திற்கு விற்பனை !

 

தங்க விலையில் குறைவு.. ரூ.29 ஆயிரத்திற்கு விற்பனை !

மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை குறைந்து கொண்டே வந்து நேற்று முன்தினம் ரூ.196 வரை உயர்ந்தது.

ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை குறைந்து கொண்டே வந்து நேற்று முன்தினம் ரூ.196 வரை உயர்ந்தது. அதன் பின்னர் நேற்று குறைவைச் சந்தித்த தங்க விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 

gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,625க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,000க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 47.80க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,800க்கு விற்கப்படுகிறது.