தங்க புதையல் எடுக்க ரூ. 2 கோடி பேரம் : போலி சாமியாருடன் கைதான அரசு அதிகாரி!

 

தங்க புதையல் எடுக்க ரூ. 2 கோடி பேரம் : போலி சாமியாருடன் கைதான அரசு அதிகாரி!

 குறிப்பாக  அமாவாசை,  பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில் குறி சொல்லும் செல்வராஜிடம் ஏராளமானோர் குறிகேட்டு செல்வது வழக்கம். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். 38 வயதான இவர் மாந்திரீகம், பில்லி சூனியம் செய்வதில் வல்லவர் என அப்பகுதி வாசிகள் நம்பியுள்ளனர்.  குறிப்பாக  அமாவாசை,  பவுர்ணமி நாட்களில் இரவு நேரங்களில் குறி சொல்லும் செல்வராஜிடம் ஏராளமானோர் குறிகேட்டு செல்வது வழக்கம். 

அந்த வகையில் சாமியார் செல்வராஜ் குறி கேட்க வந்த தோப்படைபட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மற்றும் அவரது நண்பர்களிடம் , ஆனையூரில்  தங்க கட்டிகள்,  தங்க சிலைகள்,  வைரகற்கள் என புதையல் இருப்பதாகவும் அதை எடுத்து தர தலா 50 லட்சம் என காணிக்கையாக  2 கோடி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

tt

 இதை நம்பிய அவர்கள் கணிக்கையை கொஞ்சம் குறைக்கும் படி சாமியாரிடம் கேட்க அவர் அதற்கு உடன்படவில்லை என தெரிகிறது. இதனால் கடுப்பான நால்வரும், சாமியாடி புதையலை மறைத்து வைத்துள்ளார் என்று மாவட்ட எஸ்.பிக்கு போன் செய்து கூறிவிட்டு  கையுடன், அந்த செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டனர்

இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் சாமியார் செல்வராஜை கண்காணித்துடன் மாறுவேடத்தில் அங்கு குறி கேட்க சென்றுள்ளனர்.  அப்போது வந்தவர்கள் போலீஸ் என்பது தெரியாமல் புதையல் விஷயத்தை அவர்களிடமும் சொல்ல சாமியார் செல்வராஜை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் புதையல் இருப்பதாக கூறியது ஏமாற்றுவேலை என்பது தெரியவந்தது.

tt

சாமியாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், புதையல் எடுக்க திட்டம் போட்ட தோப்படைபட்டி கிராமநிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி, மற்றும் முத்து, மகாதேவன், அருள் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.   அத்துடன் மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய மண்டை ஒடுகள், சிலைகள் மற்றும் போலி வைர கற்களை கைப்பற்றிய போலீசார்  ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.