தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது வாக்களார்களின் பொறுப்பு! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

 

தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது வாக்களார்களின் பொறுப்பு! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

வாக்காளர்கள் தங்களது பிரச்னைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவர்களின் பொறுப்பு என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் அந்த மாநிலத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூரின் மத்திய தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மோகன் பகவத் தனது வாக்கினை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது வாக்காளர்களின் பொறுப்பு. ஒவ்வொரு தேர்தலும் முக்கியமானது மற்றும் 100 சதவீதம் வாக்குபதிவு நடைபெற வேண்டும். தங்களது பிரச்னைகளை மனதில் வைத்து மக்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

டிக்டாக் புகழ் சோனாலி

அரியானாவிலும் இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஹிசாரில் உள்ள வாக்குசாவடியில் டிக் டாக் புகழ் பிரபலமும், அதாம்பூர் பா.ஜ.க. வேட்பாளருமான சோனாலி போகட் தனது வாக்கினை பதிவு செய்தார்.