தங்கம் வேண்டாம், தக்காளியே போதும்! – பாகிஸ்தான் வைரலான மணமகள் படம்!

தங்கம் வேண்டாம், தக்காளியே போதும்! – பாகிஸ்தான் வைரலான மணமகள் படம்!

தங்க நகைகளுக்குப் பதில், தக்காளியால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து மணமகள் ஒருவர் போஸ் கொடுத்திருந்தது உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் வெங்காயம் விலை அதிகாித்து வருவது போல், பாகிஸ்தானில் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.300-க்கு மேல் விற்பனையாகிறதாம். இதனால், தக்காளி வாங்கி சமைக்க முடியாத நிலையில் சாமானிய மக்கள் உள்ளனர்.

bride

இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தடைவிதித்துள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டிலும் தக்காளி விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தக்காளி விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள், அரசியல்கட்சிகள் கோரிக்கைவிடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

bride

இந்த நிலையில், உலகின் கவனத்தை ஈர்க்க அந்நாட்டு மணமகள் ஒருவர் தங்க நகைக்கு பதில் தக்காளி நகை அணிந்து எடுத்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  தக்காளி மாலை மட்டுமின்றி, நெற்றிச்சுட்டி, கம்மல், பிரேஸ்லெட்டாக தக்காளியை அவர் அணிந்திருந்தார். மேலும், திருமண பரிசாக தனக்கு மூன்று கூட தக்காளியை பெற்றோர் பரிசளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த பல பாகிஸ்தானியரும் மிகவும் வசதியான பெண் போல, தக்காளி நகை அணிந்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.