தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுனுக்கு ரூ.528 எகிறியது!

 

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுனுக்கு ரூ.528 எகிறியது!

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்தது.  எதிர்வரும் பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு தங்க வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்தனர். மேலும் உள்நாட்டில் தேவை அதிகரித்தது போன்ற

தங்க ஆபரணம்


சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பவுனுக்கு ரூ.528 ரூபாய் உயர்ந்தது.


சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்தது.  எதிர்வரும் பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு தங்க வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்தனர். மேலும் உள்நாட்டில் தேவை அதிகரித்தது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இன்று தாறுமாறாக உயர்ந்தது.


சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு  66 ரூபாய் அதிகரித்து ரூ.3,213-ஆக உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,147ஆக குறைந்து இருந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 528 ரூபாய் அதிகரித்து ரூ.25,704ஆக ஏற்றம் கண்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.25,176க்கு விற்பனையானது.


வெள்ளி நகைகள்


தங்கத்தை போல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ரூ.41,300ஆக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றை காட்டிலும் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.41.30ஆக உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.40.30க்கும், ஒரு கிலோ ரூ.40,300க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.