தங்கமணி – வேலுமணியை கட்டுப்படுத்த அழுத்தம்… காலை வாரப்போவது ஓ.பி.எஸா..? ஈபிஎஸா..?

 

தங்கமணி – வேலுமணியை கட்டுப்படுத்த அழுத்தம்… காலை வாரப்போவது ஓ.பி.எஸா..? ஈபிஎஸா..?

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்து இயங்குவதாக கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள். அவர்களின் பிடியில் இருந்து அவர் வெளியே வந்தால் தான் கட்சி உடையாமல் காப்பாற்றப்படும் என்ற பேச்சும் ஓடுகிறது.

அதிமுகவில் நாரதர் கலகத்தை ஆரம்பித்து விட்டு ராஜன் செல்லப்பா அமைதியாகிட்டார். அதையே இன்னொரு எம்எல்ஏவான குன்னம் ராமச்சந்திரனும் வழி மொழிந்து இருக்கிறார். இதில் பிரச்னை என்னவென்றால் அதிமுக  தொண்டர்கள் வரை இது விவாத பொருளாக மாறி கட்சி இரண்டாக உடைவதற்குள் அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அதிமுக தலைமை முடிவு செய்து இருக்கிறது. முதல் காரணம் தொண்டர்கள் இன்னும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையிலேயே கட்சி பணி செய்கிறார்கள். அவர்கள் அதிமுக கட்சி என்பதையே மறந்துவிட்டார்கள். eps

இரண்டாவது காரணம் இரட்டை தலைமை இருப்பதால் அதிமுக பொதுக்குழு கூடும்போது இருவரில் ஒருவர் காலை வாரிவிடலாம் என்கிற நிலை ஓ.பி.எஸ் -எடப்பாடி இருவர் மத்தியில் ஓடுகிறது. இதை வெளியே சொல்லாமல் இருவரும் சிரித்து பேசுவது வேறு கதை. அதுபோன்ற ஒரு நிலை பொதுக்குழுவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ, எம்.பி போன்றவர்களை அழைத்து பேசி பொதுக்குழு உறுப்பினர்களை சரி கட்ட வேண்டும். பொது இடத்தில் கட்சிக்குள் நடக்கும் விஷயங்களை வெளியில் பேசக் கூடாது என்பதும் முக்கிய அஜெண்டாவாக இருக்கிறது. eps

தொண்டர்களை நகர, ஒன்றிய, கிளை கழக, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் யாரும் மதிப்பதில்லை. கட்சி செலவுக்கு 500 முதல் 1000 வரை கூட கொடுக்க மறுக்கிறார்களாம். அமைச்சரை போய் பார்த்தால் ஏன் வந்தே என்று கேட்பதும். உதவியாளரை பார்க்கச் சொல்வதும். அவர் இலை கட்சியின் தொண்டனிடமே கமிஷன் கேட்பதும்தான் நடக்கிறது.  eps

இதனால் தொண்டர்களை அரவணைத்து செல்வதும் 12ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முக்கிய விவாத பொருளாக இருக்கும்.  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருந்து இயங்குவதாக கட்சியினரே பேசிக் கொள்கிறார்கள். அவர்களின் பிடியில் இருந்து அவர் வெளியே வந்தால் தான் கட்சி உடையாமல் காப்பாற்றப்படும் என்ற பேச்சும் ஓடுகிறது.