தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது: திருமாவளவன்

 

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது: திருமாவளவன்

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்

சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார். இது டிடிவி தரப்புக்கு ஏமாற்றத்தையும், ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்டமாக தினகரன் என்ன நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும், தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் சாதகமான தீர்ப்பு வரும் என தான் நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.