தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் கோரிக்கை ஏற்பு…இடைத்தேர்தல் ஒத்திவைப்பு…

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் கோரிக்கை ஏற்பு…இடைத்தேர்தல் ஒத்திவைப்பு…

கர்நாடகாவில் நடைபெற இருந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடாகாவில் காங்கிரஸ்- மஜத கூட்டணியில் இடம்பெற்ற 15 எம் எல் ஏக்கள் கட்சித் தாவல் குற்றத்திற்காக அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் வரும் வரை எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட கூடாது என்றும் கர்நாடக சபாநாயகர் அறிவித்து உத்திரவிட்டார். 
இதனையடுத்து அங்கு காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.

கர்நாடகம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள்

இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்களும் இடைத் தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, அவர்களின் கோரி்க்கையை ஏற்று இடைத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார்