தகாத உறவு மனரீதியான துன்புறுத்தல் இல்லை: குற்றவாளியின் 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

 

தகாத உறவு மனரீதியான துன்புறுத்தல் இல்லை:  குற்றவாளியின் 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்தலாக கருதமுடியாது எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகக் கணவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 

சேலம்: தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்தலாக கருதமுடியாது எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகக் கணவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரோஷிணி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மாணிக்கத்திற்கு, சரசு என்ற பெண்ணுடன் பழக்கம்  ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் கணவர் கேட்காததால், தனது ஒன்றரை வயது மகளுடன் கிணற்றில் குதித்து சங்கீதா தற்கொலை செய்துகொண்டார். 

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், மாணிக்கத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2007 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, மாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது எனவும்  அதே நேரத்தில் தற்கொலைக்கு  தூண்டிய குற்றச்சாட்டுகள் குறித்து  காவல்துறை நிரூபிக்கத் தவறிவிட்டதாலும் மாணிக்கத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.