ட்விட்டர் ஹேக் விவகாரம்: நடிகர்கள் உறவை சிதைக்காதீர்கள் – அருண் விஜய் வேண்டுகோள்!

 

ட்விட்டர் ஹேக் விவகாரம்: நடிகர்கள் உறவை சிதைக்காதீர்கள் – அருண் விஜய் வேண்டுகோள்!

சென்னை: சிவகார்த்திகேயன் குறித்து ஹேக் செய்யப்பட்ட தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவான சர்ச்சை ட்வீட் குறித்து அருண் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

திரை பிரபலங்களின் சமூக வலைத்தள அக்கவுண்ட்கள் அவ்வப்போது ஹேக்கர்களால் ஆட்கொள்ளப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போது நடிகர் அருண் விஜய்யின் ட்விட்டர் கணக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவரது ட்விட்டர் அக்கவுண்டில் பகிரப்பட்ட ட்வீட் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய ஸ்டாராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் டிரைலர் வெளியானது. பக்கா மாஸாக இருந்த ‘சீமராஜா’ டிரைலருக்கு சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பு கிடைத்தன. இந்நிலையில், அருண் விஜய்யின் ட்விட்டர் அக்கவுண்டில், யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்த இல்லாம போச்சு. தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும். திறமை உள்ளவர்களை ஆதரியுங்கள் என ட்வீட் போடப்பட்டிருந்து.

இதையடுத்து, சில நிமிடங்களில் தனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 1 மணி நேரத்துக்கு தனது ட்வீட்களை கண்டுக் கொள்ள வேண்டாம் எனவும் அருண் விஜய் தெரிவித்திருந்தார். என்ன தான் ஹேக்கர்கள் கைவசம் காட்டியிருந்தாலும், அந்த ட்வீட்டில் அருண் விஜய் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு பரவத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். கடின உழைப்பும், பொறுமையும் மதிப்பவன். யாரும் பெரியவரும் இல்லை சிறியவரும் இல்லை. உண்மையான திறமையை மதித்திருக்கிறேன். இனியும் மதிப்பேன். சக நடிகரை ஒருபோதும் மட்டமாக பேசும் எண்ணமும், அவசியமும் எனக்கு இல்லை. அண்ணன் – தம்பிகளாக இருக்கும் நடிகர்களின் உறவை சிதைக்காதீர்கள்’ என அருண் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.