ட்விட்டரில் ட்ரெண்டாகும் #அறம்_செய்யும்_RMM ஹேஷ்டேக்…

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #அறம்_செய்யும்_RMM ஹேஷ்டேக்…

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் சூழ்நிலையில் 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படதுடன் தண்ணீர் இல்லாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். போர்கால அடிப்படையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முயற்சித்து வருகிறது. 

1

இந்தநிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர், ரஜினி படம் ஓட்டிய குடிநீர் லாரிகளின் மூலம் மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வருகின்றனர். தண்ணீர் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வருகின்றனர். வட சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இலவசமாக குடிநீர் வழங்கிவருகின்றனர்.

3

கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் நாள்தோறும் இரணடு லாரிகளில் 48 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். 

சென்னையில் மட்டுமல்லாது மாநிலம் எங்கும் தண்ணீர் பிரச்னை எங்கெங்கு அதிகம் உள்ளதோ, அப்பகுதிகளில் எல்லாம் ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் நோக்கத்துக்காக செய்யவில்லை என்றும் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே  செய்வதாகவும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

2

இவர்களை போற்றும் விதமாக இன்று ட்விட்டரில் #அறம்_செய்யும்_RMM அதாவது அறம் செய்யும் ரஜினி மக்கள் மன்றத்தினர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது. தமிழக அரசே மக்களுக்கு தண்ணீர் வழங்க யோசித்துவரும் நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் இலவசமாக தண்ணீர் விநியோகிப்பது மக்களுக்கும் நிறைவை கொடுத்துள்ளது.