ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TNRejectsBJP எனும் ஹாஸ்டேக்!!

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TNRejectsBJP எனும் ஹாஸ்டேக்!!

இந்தியாவில் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், தமிழகத்தில் ஒரு இடம் கூட பெறவில்லை. இதனால் ட்விட்டரில் தற்போது #TNRejectsBJP எனும் ஹாஸ்டேக்கை நாடு முழுவதும் வைரலாக்கி வருகின்றனர். 

இந்தியாவில் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், தமிழகத்தில் ஒரு இடம் கூட பெறவில்லை. இதனால் ட்விட்டரில் தற்போது #TNRejectsBJP எனும் ஹாஸ்டேக்கை நாடு முழுவதும் வைரலாக்கி வருகின்றனர். 

tweet

இந்தியாவில் தற்போது 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதியைத் தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிந்து அதை இன்னும் பணியும் நேற்று முடிவடைந்தது.

இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 340 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் உள்ளன அதே போல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 90க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு இருந்தன மேலும் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் ஜனதா தளம் உட்பட இதர கட்சிகள் 110 இடங்களுக்கு மேல் வென்றுள்ளன.

bjp

இதில் பாஜக கட்சி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்ட தொகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எவ்வித ஆதரவும் இல்லாமல் தனிப்பெரும்பான்மை பெற்று இருந்தன. நாடு முழுவதும் மோடியின் சுனாமி சுற்றித் திரிந்த நிலையில் தமிழ்நாட்டில் துரும்பைக்கூட அசைத்து பார்க்க முடியவில்லை.

காரணம், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன். ராதாகிருஷ்ணன் இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தார்.  பாஜகவிற்கு சென்ற முறை தேர்தலில் கிடைத்த ஒரு தொகுதி கூட இம்முறை தேர்தலில்  தமிழகத்தில் இருந்து கிடைக்கவில்லை.

bjp

இந்த படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பாஜகவின் மதவாத அரசியல், ஸ்டெர்லைட் ஆலை போராட்டம், வேண்டாம் என்று போராடிய நிலையிலும் திணித்த ஹைட்ரோ கார்பன் திட்டம் என எண்ணிலடங்காத காரணங்களை அடுக்கலாம்.

பாஜக வின் இந்த படுதோல்வியை டிவிட்டரில் கொண்டாடிய மக்கள், ஒட்டுமொத்த நாடே வரவேற்ற மோடி தலைமையிலான பாஜக அரசை, தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கச் செய்யாமல் தோல்வியை அளித்ததால் #TNRejectsBJP எனும் ஹாஸ்டேக்கை நாடுமுழுவதும் ட்ரெண்ட்  செய்கின்றனர். 

இது தற்போது இந்திய ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.