ட்விட்டரில் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்

ட்விட்டரில் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்

ஒரு பில்லியன்  மக்களை விண்வெளியை நோக்கி பார்க்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

ஒரு பில்லியன்  மக்களை விண்வெளியை நோக்கி பார்க்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்தார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

Stalin tweet

கடந்த ஜூலை 22 ஆம் தேதி அன்று சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் கழித்து அது விண்ணில் தரை இறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன் படி இன்று காலை 1 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் சந்திராயன்-2 தரை இறங்கும் என அறிவிக்கப் பட்டதை அடுத்து நாடே சந்திராயன்- 2 தரை இறங்குவதை காண ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் எதிர் பாராத விதமாக சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப் பட்டதால் விண்கலம் நிலவில் தரை இறங்கவில்லை. 

இந்நிகழ்வால் இஸ்ரோ தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானிகளும் சோகத்தில் மூழ்கினர். அவர்களின் முயற்சியை பாராட்டும் விதமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.