ட்ரைவர்கள் வாலாட்டினால் 112-ரோமியோக்கள் ரௌசு பண்ணால் 112 -பெண்ணுக்கு பாதுகாப்பு எண்112.. 

ட்ரைவர்கள் வாலாட்டினால் 112-ரோமியோக்கள் ரௌசு பண்ணால் 112 -பெண்ணுக்கு பாதுகாப்பு எண்112.. 

நொய்டா காவல்துறையினர் இரவில் வீட்டிற்கு தனியாக வாடகை காரில்  பயணம் செய்யும் போது பாதுகாப்பின்மையை  உணரும் பெண்களுக்கு உதவும் ஒரு திட்டத்தைத் தொடங்கினர். இந்த திட்டத்திற்காக , நான்கு போலீஸ் காரர்களையும்   (இரண்டு பெண்கள் உட்பட) ஆறு போலிஸ் வாகனங்களையும்  காவல்துறை நிறுத்தியுள்ளது.

பெண்கள் தனியாக பயணித்து  வீட்டிற்கு  செல்ல வேண்டும் என்று நினைத்தால் இரவில் 112 ஐ டயல் செய்தால் உடனே  ஒரு போலீஸ் குழு அவர்களை சென்றடையும். சாலையில் நிறுத்தப்பட்ட போலிஸ் வாகனங்கள் பெண்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லாது என்பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்; மாறாக, போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டால்  உதவி பெறவும்,எமர்ஜென்சியான சூழ்நிலையில்    அவர்களை அழைத்துச் செல்லவும் குழு உதவும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உத்தரப்பிரதேச காவல்துறையினர் இந்த முயற்சியைத் தொடங்கினர், அதன் பின்னர் பெண் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, . இந்த திட்டம் இப்போது செயல்முறைக்கு வந்துள்ளது  அது வெற்றிகரமாக இருக்கும் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது.