ட்ரூ காலர் மூலம் பழகி பல பெண்களுடன் உல்லாசம் ! ஆபாச படத்துடன் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது !

 

ட்ரூ காலர் மூலம் பழகி பல பெண்களுடன் உல்லாசம் ! ஆபாச படத்துடன் மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது !

திருப்பத்தூர் மாவட்டதை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் செல்போனில் அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகளும், புகைப்படங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த புகைப்படங்களை அனுப்பியது நெல்லை மாவட்டம் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது.

செல்போனிலேயே காதல் வலை விரித்து, ஆபாச படம் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் திருப்பத்தூரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டதை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் செல்போனில் அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகளும், புகைப்படங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த புகைப்படங்களை அனுப்பியது நெல்லை மாவட்டம் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் பதுங்கி இருந்த வினோத்தை கைது செய்து நாட்றம்பாள்ளி அழைத்து சென்றது போலீஸ். வினோத்திடம் மேற்கொண்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

women

ட்ரூ காலரில் பெண்கள் பெயரை தேடிப்பிடித்து அவர்களது செல்போனிற்கு குறுஞ்செய்தி, ஆபாச செய்தி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை பார்த்து மயங்கும் பெண்களுக்கு காதல் வலைவிரிப்பார். பின்னர் அவர்களின் அந்தரங்க படங்களை அனுப்புமாறு கேட்க, வெகுளித்தனமான பெண்களும் தங்களது நிர்வாண புகைப்படங்களை வினோத்துக்கு அனுப்பி உள்ளனர். அதற்கு பிறகு விநோத் தன்னுடைய வேலையை காண்பிப்பார். ஆபாச படங்களை இணையத்தில் போட்டுவிடுவேன் என மிரட்டி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து இன்பம் அனுபவிப்பார். 
இந்நிலையில் கல்லூரி மாணவி மூலமாக சிக்கிய வினோத் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் செல்போன் மூலம் 50க்கும் மேற்பட்ட, பல்வேறு மாநில பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. 
பலமுறை எச்சரித்தும் அறிமுகம் இல்லாத ஆண்களுக்கு தங்களுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி சிக்கிக் கொள்கின்றனர்.