டோல்கேட் டிக்கெட்டை தூக்கியெறியாதீங்க…! அதை இப்படியெல்லாமா பயன்படுத்தலாம்?!

 

டோல்கேட் டிக்கெட்டை தூக்கியெறியாதீங்க…! அதை இப்படியெல்லாமா பயன்படுத்தலாம்?!

பெரும்பாலும் கார் வைத்திருப்பவர்கள், சென்னையை கடந்தாலே சலித்துக் கொள்கிற விஷயம், தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கிராஸ் செய்யும் போது எடுக்க வேண்டிய டிக்கெட்டைப் பற்றியதாக தான் இருக்கும். இவங்க ரோட்டு போட்டு இத்தனை வருஷமாச்சு.. இன்னுமா இந்த ரோட்டுக்கான பணத்தை எடுக்காம இருக்காங்க என்று சலித்துக் கொண்டே தான் இன்று வரையிலும் டோல்களில் டிக்கெட் எடுத்து, முணுமுணுத்தப்படியே அடுத்த நூறு, இருநூறு மீட்டர்களில் அதைக் கசக்கி எறிந்து விடுவார்கள்.

பெரும்பாலும் கார் வைத்திருப்பவர்கள், சென்னையை கடந்தாலே சலித்துக் கொள்கிற விஷயம், தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கிராஸ் செய்யும் போது எடுக்க வேண்டிய டிக்கெட்டைப் பற்றியதாக தான் இருக்கும். இவங்க ரோட்டு போட்டு இத்தனை வருஷமாச்சு.. இன்னுமா இந்த ரோட்டுக்கான பணத்தை எடுக்காம இருக்காங்க என்று சலித்துக் கொண்டே தான் இன்று வரையிலும் டோல்களில் டிக்கெட் எடுத்து, முணுமுணுத்தப்படியே அடுத்த நூறு, இருநூறு மீட்டர்களில் அதைக் கசக்கி எறிந்து விடுவார்கள்.

toll gate

அந்த சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்தவில்லை. டோல்கேட் கட்டணம் வசூலிப்பது அந்த நெடுஞ்சாலை முடியும் வரையில், நீங்கள் பயன்படுத்துவதற்கும், உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கும் சேர்த்து தான் என்பதை முதலில் மனதில் பதிய வையுங்கள்!
ஒவ்வொரு சுங்கச்சாவடியை நீங்கள் கடக்கும் போதும், கட்டணம் செலுத்தி எடுக்கின்ற டிக்கெட்டை இனிமேல் உங்கள் பயணம் பாதுகாப்பாய் முடியும் வரையில் பத்திரமாக வைத்திருங்கள். அந்த கட்டண ரசீதை நீங்கள் இவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம்.
1. உங்கள் பயணத்தில் என்ன விதமான இடையூறுகள் ஏற்பட்டாலும், டிக்கெட்டில் இருக்கும் டோல் ஃப்ரீ எண்ணுக்கு கால் செய்யலாம். அடுத்த பத்து நிமிஷத்துல நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் உங்களுக்கு உதவ ஓடோடி வருவார்கள்.
2. குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். திடீரென ஏற்படுகிற அசெளகரியத்தில், உங்களில் யாருக்கோ உடல் நிலை சரியில்லை. மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இந்த வனாந்தரமாய் இருக்கும் நெடுஞ்சாலையில் எங்கே மருத்துவமனையைத் தேடிக் கொண்டிருக்கிறது என்று விழி பிதுங்கி நிற்க வேண்டாம். நீங்கள் கட்டணம் செலுத்தி எடுத்த ரசீதின் பின்புறம் இதற்கெனவும் தனியாக நம்பர் போட்டுருப்பாங்க. போன் செய்தால், அடுத்த அஞ்சு நிமிஷத்துலேயே அருகில் இருக்கும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவிக்கு வந்து நிற்கும்.
3. வீட்டை விட்டு கிளம்பும் போது எல்லா டயரையும் சரியா செக் பண்ணி தான் கிளம்பினேன். ஆனாலும் நடுவழியில வண்டி பஞ்சராகி நிற்கிறது. அவசரத்துல ஸ்பேர் டயர் வேற எடுத்து வைக்கலை. பஞ்சர் கடை எங்கே இருக்குன்னே தெரியலையே என்று தவிக்க வேண்டாம். அல்லது, திடீரென வண்டி பாதியில் பழுதாகி ஸ்டார் செய்ய மக்கர் செய்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை என்றாலும், அதற்கு அதே ரசீதின் பின்புறத்தில் இன்னொரு நம்பர் இருக்கும். அந்த எண்ணிற்கு போன் செய்தால் பத்து நிமிஷத்துல உங்களுக்காக உதவிக்கு ஆட்கள் வந்துருவாங்க. பஞ்சர் என்றால், அவங்களே பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க. ரிப்பேர் எனில் என்ன ரிப்பேர் என்று கண்டுபிடித்து, அதையும் அவங்களே சரி செய்து கொடுத்துடுவாங்க. இது அவங்களோட கடமை. அதுக்கும் சேர்த்து தான் டோல்கேட்ல டிக்கெட் எடுத்திருக்கீங்க!

tollgate

4. நடுவழியில் பெட்ரோல், டீசல் காலியாகிவிடுகிறது. அருகில் பெட்ரோல் பங்க் எதுவும் கண்களில் தென்படவில்லை. குடும்பத்தோடு சென்று கொண்டிருக்கும் போது, பெட்ரோல் பங்க் தேடி, தேவையில்லாம நீங்களும் டென்ஷனாகி, உடன் வந்திருக்கும் பயணிகளையும் டென்சனாக்கி, காரை விரட்டிக்கிட்டு பெட்ரோல் பங்க் தேடி ஓட்டிச் செல்லாதீங்க. அதற்கும் தனியா எண் இருக்கு. ஒரு தகவல் சொன்னீங்கன்னா… நீங்க இருக்கிற இடத்திற்கு அஞ்சு லிட்டரோ, பத்து லிட்டரோ எவ்வளவு கேட்கறீங்களோ அவ்வளவு பெட்ரோல் / டீசலோடு வந்து நிற்பாங்க. அதற்கு உண்டான காசைக் கொடுத்துட்டு, அடுத்து வர்ற பெட்ரோல் பங்க் வரைக்கும் சாவகாசமா வண்டியை ஓட்டிச் செல்லலாம்.
நாம எடுக்கிற டோல்கேட் கட்டணத்துல இத்தனை விஷயம் இருக்கு. ஆனா இது எதுவுமே தெரிஞ்சுக்காம, நடுவழியில பிரச்சனையை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம விழி பிதுங்கி நின்னுக்கிட்டு இருக்காதீங்க. இந்த சேவைகள் நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களோட மட்டும் நின்று விடக்கூடாது. இந்த தகவல்களை எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச, அடிக்கடி வெளியூர் போற நண்பர்கள், சொந்தக்காரங்களுக்கு ஷேர் செய்து, அவங்களோட பயணத்தை பாதுகாப்பா மாற்றுங்க!