டேஸ்டியான ஆலூபராத்தா செய்வது எப்படி?

 

டேஸ்டியான ஆலூபராத்தா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு. : 300 கிராம்
வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய். : 1( பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது. : 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள். : 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள். : 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள். : 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை : சிறிது

செய்முறை

1. உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி கெட்டி தன்மை இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

2. அதில் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் கொத்தமல்லி புதினா இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

2. ஏற்கனவே பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து சிறிய வட்டமாக திரட்டி அதனுள் இந்த உருளைக்கிழங்கு கலவையை சிறிது வைத்து நன்றாக சப்பாத்தியை மூடி பிறகு மெதுவாக சப்பாத்தியை திரட்ட வேண்டும் .

3. தோசைக்கல்லை நன்றாக சூடேற்றி சப்பாத்தியை போட்டு மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவைத்து எடுக்கவும் .

 

4.தக்காளி சாஸ் ; ஊறுகாய் மற்றும் தயிர் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் .